சென்ற பதிவில் அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றாலும் சென்றேன், அடுத்து மூன்று மாதங்கள் கழித்தே இங்கே வர முடிகிறது. இடையில் ப்ளாக் பாஸ்வர்ட் மறந்துபோய்,பின்னர் ப்ளாக்கே அழிக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு முன்புதான் சரி செய்ய முடிந்தது. ஏதோ கூகுளில் பாஸ்வர்ட் திரும்ப பெரும் ஆப்ஷன் இருந்ததால் முடிந்தது. நன்றி கூகுளாரே.
இந்த முறை நாம் தமிழில் படிக்கவிருப்பது ஒரு திகில் கதை. முன்பு சொன்னதுபோல ஒரு கருப்புகிழவி கதையைத்தான் பதிவிட நினைத்திருந்தேன். ஆனால், நம்ம எடிட்டரும் தீவிர வாசகர்களும் ஏதாவது நினைப்பார்களோ என்று அதை விட்டு விட்டு இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். ஏன் இந்த கதை என்றால், இந்த கதையின் ஓவியர் நமக்கெல்லாம் பரிச்சயமானவர் – al williamson. இவர்தான் நம்ம காரிகன், ப்ளாஷ் கார்டன் கதை ஓவியர் (மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் கூகிளில் தேடுங்கள் பாஸ்,அங்கே ஆங்கிலத்தில் இருப்பதை இங்கே தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்ய நான் விரும்பவில்லை).
இந்த கதை ட்வைலைட் ஜோன் என்கிற Gild key காமிக்ஸ் இதழில் 1973ம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது. கதையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.