நண்பர்களே,
நெடுநாட்களாக லயன் / முத்து காமிக்ஸ் இதழ்களின் புத்தம் புதிய புத்தகங்களை படிப்பதிலேயே நேரம் கழிந்ததால் புதியதாக பதிவிட தோன்றவில்லை. மன்னிக்கவும் ஆனால் கடந்த 45 / 50 நாட்களாக புத்தகங்கள் எதுவுமே இல்லாததால் இந்த (விஷப் பரிட்சையில்) பரிசோதனை முயற்சியில் இறங்கினேன். ஆமாம், தமிழில் ஒரு ஸ்கான்லேஷன் முயற்சி இது.
சரி, ஸ்கான்லேஷன் செய்வது என்று முடிவாகிவிட்டது. எந்த கதையை செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த வேளையில் தமிழ் காமிக்ஸின் சூப்பர் கவ-பாய் டெக்ஸ் வில்லர் நினைவுக்கு வந்தார். சமீபத்தில் ஒரு டவுன்லோட் தளத்தில் அவரது ஒரு புத்தம் புதிய சாகசத்தை படித்தது நினைவுக்கு வந்தது. ஆகையால் அந்த கதையையே ஸ்கான்லேஷன் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.
கதைகளை உருவாக்கும்போதே வண்ணத்தில் உருவாக்கினால் ஒழிய டெக்ஸ் வில்லர் கதைகளை கலரில் வெளியிடப்போவதில்லை என்று விஜயன் அவர்கள் கூறி இருந்ததால் பல கதைகள் (வெளிவந்து பல ஆண்டுகளுக்கு பின்னர்) வண்ணமயமாக்கப்பட்டு வந்தாலும் அவற்றை கருப்பு வெள்ளையிலேயே வெளியிட்டு வருகிறார் நமது லயன் காமிக்ஸ் எடிட்டர். உதாரணம் - சமீபத்தில் வெளியிடப்பட்ட காமிக்ஸ் கிளாசிக்ஸ் தலை வாங்கி குரங்கு.
அதனாலேயே வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த கதையை எடிட்டரின் பார்வைக்கு கொணர விரும்பினேன். அதனாலேயே இந்த ஸ்கான்லேஷன் முயற்சி.
முழு கதையையும் வெளியிடுவது சட்டப்படி தவறு என்பதால் இங்கே இதனுடன் முடித்துக்கொண்டு மற்றவற்றை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.முழு கதையையும் டவுன்லோடு செய்ய இங்கே அமுக்கவும்: எமனின் திசை வடக்கு – Thanks to Tamim