ரொம்ப நாளாக காமிக்ஸ் கதைகளை அமைதியாக படித்துக்கொண்டு வருகிறேன். கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்கள்.ஆனாலும் இதுவரையில் ஒரே ஒரு வாசகர் கடிதமோ, அல்லது ஆன்லைனில் பின்னூட்டமோ இட்டது கிடையாது.
இந்த ஆண்டை தமிழ் காமிக்ஸ் மற்றும் தென்னக காமிக்ஸ் வரலாற்றில் ஒரு watershed year என்றே சொல்லவேண்டும். இங்கே பெங்களூரிலும் காமிக்ஸ் கதைகள், பழைய pulp fiction குறித்து ஒரு ஆர்வம் தோன்றியுள்ளது (இன்றைய டெக்கன் குரோனிக்கல் பேப்பரிலும் மெஜஸ்டிக் புத்தக கடையை பற்றி ஒரு கட்டுரையே வந்துள்ளது).
எனக்கும் காமிக்ஸ் கதைகளை படிக்கும்போதெல்லாம் ஒருமுறையேனும் காமிக்ஸ் எடிட்டராக அவரது பணியை ஒருநாளாவது செய்ய ஆசை. ஆனால் இதுவரை நடக்கவில்லை (இனிமேலும் நடக்குமா என்றால், நடக்காது/தெரியாது).
அப்படி காமிக்ஸ் புத்தக எடிட்டராக ஆசைப்பட்டதின் விளைவே இந்த வலைப்பூ. இங்கே காபிரைட் உரிமை இழந்த கதைகளை நான் தமிழாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன். சில வேளைகளில் அவை இன்னமும் காபிரைட் பெற்று இருப்பதாக தெரியப்படுத்தினால் அவற்றை எடுத்து விடுவேன். ஆகையால், காமிக்ஸ் எடிட்டராகும் என் கனவு இந்த வலைப்பூ மூலம் இன்று நிறைவேறுகிறது.
முதல் கதையாக மின்னல் வீரன் என்கிற கதை. அதென்னமோ தெரியவில்லை, கவ் பாய் கதைகள் எனக்கு சிறு வயது முதலே கொள்ளைப்பிரியம். ராணி காமிக்ஸ் இதழ்களில் படித்த பல கதைகளை இப்போதும் என்னால் மிகவும் தெளிவாக நினைவு கூற இயலும். நான் படித்த முதல் ராணி காமிக்ஸ் நாலாவது பலி. அதன் பின்னர் அனைத்து கதைகளையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அப்படி ரசித்த ஒரு கதைதான் மின்னல் வீரன். ஆனால் அந்த கதையை என்னால் தேடிப்பிடிக்க முடியவில்லை. அதனால் இந்த மின்னல் வீரன் கதை முதல் போஸ்ட் ஆக இங்கே ஆரம்பமாகிறது.
முன் குறிப்பு: இங்கே ஸ்கான் செய்து பக்கங்களை நிரப்ப என்னால் இயலாது. ஆகையால் ஸ்கான் பக்கங்களை எதிர்பார்த்து இங்கே வராதீர்கள். இங்கே உள்ளவை நான் ஸ்கான் செய்தவை அல்ல.
இந்த கதையின் அந்த கடைசி வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆகையால் இந்த கதையை என் வலைப்பூவின் முதல் கதையாக தேர்ந்தெடுத்தேன். இதைப்போன்ற வித்தியாசமான ட்விஸ்ட் கொண்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த கதையை எழுதியவர் (stan lee), இதற்கான ஓவியங்களை வரைந்தவர் (al williamson) பற்றி ஆன்லைனில் தேடினால் நிறைய தகவல் கிடைக்கும். அதையெல்லாம் சொல்லி உங்களை நான் போரடிக்க போவதில்லை. ஒரு கதையை ரசிக்க, கதையும் சித்திரங்களுமே போதும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
அடுத்த கதையாக நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயம் ஆன கருப்பு கிழவி கதையா அல்லது அறிமுகமான வேறொரு கவ் பாய் கதையா என்பதை இன்னமும் தேர்ந்தெடுக்கவில்லை. (யாராவது) இந்த வலைப்பூவை மேய்ந்தால், அவர்கள் தெரிவிக்கலாம். அடுத்த ஞாயிறு அன்று அடுத்த கதை.
Adios amigos.
வாழத்துக்கள். இன்னும் எழுதுங்கள். வாசித்து ரசிக்கக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteGood effort. A very enjoyable translation and read for me. Congratulations to you.
ReplyDeleteI like the font used (Arial Unicode MS?). Perhaps you can suggest this font to our Lion editor also.
Next time, have the possibility of clicking on the images to load a higher resolution image.
Good luck with blogging. Beware of the copyright police also. With SOPA, PIPA and all that, things are going from bad to worse day to day.
கதையின் முடிவு நன்றாக உள்ளது! மூலம் எங்கிருந்து என குறிப்பிட்டு (உங்களுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில்), ஓவியர் மற்றும் கதாசிரியருக்கு சிறப்பு அளித்தால் இன்னமும் நன்றாக இருக்கும் நண்பரே!
ReplyDeleteமன்னிக்கவும் :( I wrote too early :)
Deleteகதை முடிவு அட்டகாசம். இதைதான் பின் நவீனத்துவம் என்று இப்போதைய இலக்கியவியாதிகள் பேசிக்கொண்டு (கொன்று) இருக்கிறார்கள்.
ReplyDeleteகடைசியில் அற்புதமாக ஒரு தத்துவம் சொல்லபட்டுள்ளது!? :) அடுத்த கதையும் கவ்பாய் கதையே போடுங்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே மிக தெளிவாக கூறி விட்டீர்கள் இருப்பினும் கொடுத்த ஸ்கேன் பக்கங்களுக்காக மிக்க நன்றி கொஞ்சம் ராணி காமிக்ஸ் கதைகளுக்கு முக்கியத்துவம் தர முடியுமாவென பாருங்கள் அவை அழிந்து போனதை நினைத்து கலங்காமல் இருக்க முடியவில்லை. நல்வரவு
ReplyDeleteநல்ல பதிவு நல்ல கதை தொடரட்டும் . நன்றி !
ReplyDeleteGood post friend .Carry on the good work .
ReplyDelete오토토토토토토토토토토, 엘년 토토토토토 토토토토, 엘년 토토토토토토토, 토토토토토토, 토토토토토토, 토토토토토토토, 토토토� クイーンカジノ クイーンカジノ bet365 bet365 10cric login 10cric login 974Gambling with Bitcoin in Singapore: What is the RTP? | Legalbet
ReplyDelete