நண்பர்களே,
நெடுநாட்களாக லயன் / முத்து காமிக்ஸ் இதழ்களின் புத்தம் புதிய புத்தகங்களை படிப்பதிலேயே நேரம் கழிந்ததால் புதியதாக பதிவிட தோன்றவில்லை. மன்னிக்கவும் ஆனால் கடந்த 45 / 50 நாட்களாக புத்தகங்கள் எதுவுமே இல்லாததால் இந்த (விஷப் பரிட்சையில்) பரிசோதனை முயற்சியில் இறங்கினேன். ஆமாம், தமிழில் ஒரு ஸ்கான்லேஷன் முயற்சி இது.
சரி, ஸ்கான்லேஷன் செய்வது என்று முடிவாகிவிட்டது. எந்த கதையை செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த வேளையில் தமிழ் காமிக்ஸின் சூப்பர் கவ-பாய் டெக்ஸ் வில்லர் நினைவுக்கு வந்தார். சமீபத்தில் ஒரு டவுன்லோட் தளத்தில் அவரது ஒரு புத்தம் புதிய சாகசத்தை படித்தது நினைவுக்கு வந்தது. ஆகையால் அந்த கதையையே ஸ்கான்லேஷன் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.
கதைகளை உருவாக்கும்போதே வண்ணத்தில் உருவாக்கினால் ஒழிய டெக்ஸ் வில்லர் கதைகளை கலரில் வெளியிடப்போவதில்லை என்று விஜயன் அவர்கள் கூறி இருந்ததால் பல கதைகள் (வெளிவந்து பல ஆண்டுகளுக்கு பின்னர்) வண்ணமயமாக்கப்பட்டு வந்தாலும் அவற்றை கருப்பு வெள்ளையிலேயே வெளியிட்டு வருகிறார் நமது லயன் காமிக்ஸ் எடிட்டர். உதாரணம் - சமீபத்தில் வெளியிடப்பட்ட காமிக்ஸ் கிளாசிக்ஸ் தலை வாங்கி குரங்கு.
அதனாலேயே வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த கதையை எடிட்டரின் பார்வைக்கு கொணர விரும்பினேன். அதனாலேயே இந்த ஸ்கான்லேஷன் முயற்சி.
முழு கதையையும் வெளியிடுவது சட்டப்படி தவறு என்பதால் இங்கே இதனுடன் முடித்துக்கொண்டு மற்றவற்றை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.முழு கதையையும் டவுன்லோடு செய்ய இங்கே அமுக்கவும்: எமனின் திசை வடக்கு – Thanks to Tamim
Nice Try.
ReplyDeleteThanks................
Deleteகலக்கல். எங்க டெக்ஸ் ஐ கலர்ல பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் சிறிதளவு நிறைவேறியது சந்தோஷமே. தொடர்ந்து கலக்குங்க நண்பரே.
ReplyDeletehttp://comicsgalaata.blogspot.in/
Deleteவருகைக்கு நன்றி நண்பா. உங்கள் தளம் அட்டகாசம்.
எடிட்டர் இந்த கதையை தமிழில் வெளியிட்டால் அருமையாக இருக்கும்.
Try http://forum.mobilism.org for all our fav comics in english
ReplyDeleteDear friends,
ReplyDeleteTry the following link
http://forum.mobilism.org
you'll get all Largo Winch,Blueberry,Wayne Shelton,Lucky Luke and many more comics issues in english.Just register here you can search as per your choice.Happy reading
Regards
thanks senthil...........
Deletenanri senthil ji!
Deleteநீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவிட்டிருக்கிறீர்கள்! டெக்ஸ் மட்டும் என்ன பாவம் செய்தாரோ?! விஜயன் அவர்கள் டெக்ஸை வண்ணத்தில் வெளியிடத் தயங்குவது ஏன் என்பது புரியாத புதிர்! :(
ReplyDeleteதமிழ் scanlation அருமை. டெக்ஸ் கலரில் கலக்குகிறார். லார்கோ மற்றும் டைகர் போல கலர் மிக்சிங் அக்டிவே ஆக இல்லாமல் வண்ணங்கள் passive ஆக இருப்பதால் இது போன்ற கதைகள் வண்ணங்களில் hardcopy இல் வந்தால் நம்மால் எவ்வளவு தூரம் வண்ணங்களை ரசிக்கமுடியும் என்று தெரியவில்லை.
ReplyDelete//ஐஸ் கட்டிக்கே வேர்க்கும் பின்னிரவு // பாலைவனங்களில் இரவுப்பொழுதுகள் கடுங்குளிராகவே இருக்கும்மல்லவா??
அருமை
ReplyDelete